'இயல் திரும்புங்கள்' இயன் முறை மையம் உடல்நல விழிப்புணர்வு கருத்தரங்க தொடர் Logo
  • 'இயல் திரும்புங்கள்' இயன் முறை மையம் - உடல்நல விழிப்புணர்வு கருத்தரங்கத் தொடர்

    மேன்மேலும் அறிந்துகொள்வோம்
  • அனைவருக்கும் 'இயல் திரும்புங்கள்' (ToNormo) இயன்முறை மையத்தின் சார்பாக வணக்கம்.  

    பொது மக்கள் பயன் பெறக்கூடிய ஒரு சிறிய முயற்சியை நாங்கள்  அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    பொது மக்கள் இயன்முறை மருத்துவ முறைகளால் பயன் பெறக்கூடிய உடல் நல குறைவுகளைப் பற்றிய கருத்தரங்கத் தொடரினை துவக்கி வைக்க உள்ளோம்.  இக்கருத்தரங்கின்மூலம் நமக்கு நாமே செய்யக்கூடிய சிறிய நன்முயற்சிகளையும், பயிற்சிகளையும் பகிர உள்ளோம்.

    முழங்கால் மூட்டு வலி என்பது பலரும் அஞ்சும் ஒரு குறிப்பிடத்தக்க உடல் நல சீர்குலைவு ஆகும்.    இதனால் பலரும் உடல், உளவியல், மற்றும் சமூக நல ரீதியாகவும் பாதிக்கப்படுவர். ஆனால் நீங்கள் சில நற்தகவல்களை அறிந்துகொண்டால், மற்றும் சிறிய முயற்சிகளை எடுத்துக்கொண்டால், இந்த மூட்டு வலியிலிருந்து தம்மை பாதுகாக்கவும், அதை குறைக்கவும் செய்யலாம். இக்கருத்தரங்கின் மூலம் அதனை உங்களுக்கு பயிற்றுவிக்க முயற்சி செய்கின்றோம். 

    எங்களைத் தொடர்பு கொள்ள, +91.983.983.1690 அல்லது +91.44.2495.1690 என்ற எண்ணில் அழைக்கவும், மற்றும் tonormo@gmail.com என்ற மின்னஞ்சலில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

    இடம்: ToNormo இயன் முறை மையம், N 121, O 63, 2வது தளம், ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி, சென்னை - 600 028. (மின் தூக்கி/லிஃப்ட் வசதி உண்டு)

    தேதி & நேரம்: ஜூன் 12, 2022 (காலை 11:00 - காலை 11:30), கேள்வி பதில் (காலை 11:30 - காலை 11:45). கருத்தரங்கு நேரத்தில் தொடங்கும், வேண்டுகோள்: சரியான நேரத்தில் வரவும்.

     

  • "முழங்கால் மூட்டு வலி - இயன் முறை சிகிச்சை மற்றும் தடுப்பு" பதிவு விண்ணப்பம்

    ஜூன் 12, 2022 (காலை 11:00 - காலை 11:30)
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்:

    1. ஒரு அமர்விற்கு 15 பேர் மட்டுமே இருக்கை வசதி உள்ளதால், கருத்தரங்கிற்கு முன்கூட்டியே பதிவு செய்யவும். முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மட்டுமே இருக்கை வழங்கப்படும்.

    2. பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் கலந்துகொள்ள விரும்பினால், அவ்வுறுப்பினருக்கான தனிப் படிவத்தை தயவுசெய்து நிரப்பவும்.

    3. நிகழ்ச்சி நடைபெறும் நாளில் இருக்கைகள் காலியாக இருப்பின் நேரடியாக வருபவர்கள் அனுமதிக்கப்படலாம். மேலும் விவரங்களுக்கு 'இயல் திரும்புங்கள்' (ToNormo) இயன் முறை மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

    4. ஒலிப்பதிவு அல்லது காணொலி காட்சி பதிவு செய்ய பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    5. கருத்தரங்கில் வழங்கப்படவுள்ள தகவல்கள் விரிவானவை அல்ல. கருத்தரங்கில் பகிரப்படவுள்ள தகவலைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஏதேனும் விளைவுகளுக்கு பேச்சாளர் மற்றும் 'இயல் திரும்புங்கள்' (ToNormo) இயன் முறை மையம் பொறுப்பாகாது. மற்றும் தகவல்களில் இருக்கும் பிழைகள் அல்லது குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதற்கு பேச்சாளர் மற்றும் ToNormo இயன் முறை மையம் பொறுப்பேற்காது.

    6. கருத்தரங்கு பொது நல விழிப்புணர்வு மற்றும் தகவலுக்காக மட்டுமே. வழங்கப்படவுள்ள தகவல்கள் இயன் முறை ஆலோசனைக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் சூழ்நிலைகள் நபருக்கு நபர் மாறுபடலாம்.

    7. இந்த கருத்தரங்கு ஒரு தொழில்முறை ஆலோசனை அமர்வு அல்ல. இக்கருத்தாங்கின் தலைப்பு தொடர்பான கேள்விகள்-பதில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    8. பொறுப்புத் துறப்பு: உடற்பயிற்சிகள் சரியான முறையில் செய்யாவிடில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. புதிய காயமோ, தசைப்பிடிப்பு, தசை வலி, ஏற்கனவே இருக்கும் உடல் நல குறைபாடுகளின் தீவிரம் அதிகரித்தல், இரத்த அழுத்தத்தின் அதிகரிப்பு, மயக்கம், இதயத் துடிப்பு கோளாறுகள் மற்றும் மிகவும் அரிதான நிகழ்வுகளில் மாரடைப்பு போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன், இயன் முறை ஆலோசனையைப் பெறவும்.

    இந்த விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு கையொப்பமிடுவதன் மூலம், நான் அனைத்து ஆபத்துகளையும், பாதகமான விளைவுகளையும் முழுமையாக அறிந்து, பேச்சாளர், 'இயல் திரும்புங்கள்' (ToNormo) இயன் முறை மையம், அதன் தன்னார்வலர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோரை அனைத்து உரிமைகோரல்களிலிருந்தும் பாதிப்பில்லாதவர்களாக வைத்திருக்க ஒப்புக்கொள்கிறேன். மேலும் எந்த விபத்துக்கள் அல்லது காயங்களுக்கும் பேச்சாளர், 'இயல் திரும்புங்கள்' (ToNormo) இயன் முறை மையம், அதன் தன்னார்வலர்கள் மற்றும் முகவர்கள் பொறுப்பல்ல என்று அவர்களை விடுவிக்கிறேன்.

  • Clear
  •  - -
  • Should be Empty: