நடனப்போட்டி நிகழ்வுக்கான விதிமுறைகள்:
ஈழத்தாரகை - 2026
Eelath Thaaragai Season-01
ஈழத்தாரகை
*தமிழர் கலைபண்பாட்டுப் பாசறை - பிரித்தானியா அமைப்பினரால் நடாத்தப்படும் மாபெரும் நடனப்போட்டி நிகழ்ச்சியாகும்.
*தமிழர்கள் மட்டுமே ஈழத்தாரகை நடனப்போட்டியில் பங்குபற்ற முடியும்.
*தமிழீழத் தாயகப் பாடல்களுக்கு மட்டுமே போட்டியாளர்கள் நடனமாட முடியும்.
*போட்டியாளர்கள் நடனத்திற்கான பாடலைத் தெரிவுசெய்யும் போது அப்பாடலை முன்கூட்டியே நிர்வாகத்திற்கு அறியத்தரவேண்டும்.
*திரையிசைப் பாடல்களையோ, அல்லது திரைப்படங்களில் வந்த இசையையோ போட்டிகளில் பயன்படுத்தக்கூடாது.
*போட்டிகள் அனைத்தும் வரையறைக்கு உட்பட்டது.
ஈழத்தாரகை நடனப்போட்டியில் கலந்துகொள்ளும் (தனி நடனம் / குழு நடனம்) போட்டியாளர்களின் வயதுப் பிரிவுகள் மற்றும் நிலைகள்:
*06 வயதிலிருந்து 12 வயதிற்கு உட்பட்டோர்.
(01.09.2014 -31.08.2020)
விண்ணொளி தனிப்பிரிவு
விண்ணொளி குழுப்பிரிவு
*13 வயதிலிருந்து 17 வயதிற்கு உட்பட்டோர்.
(01.09.2008-31.08.2014)
நிலவொளி தனிப்பிரிவு
நிலவொளி குழுப்பிரிவு
*18 வயதிலிருந்து 25 வயதிற்கு உட்பட்டோர்.
(01.09.2001-31.08.2008)
கதிரொளி தனிப்பிரிவு
கதிரொளி குழுப்பிரிவு
போட்டி விதிமுறைகள்:
*ஒவ்வொரு நடன நிகழ்சிகளும் 5 நிமிடத்திற்குக் குறையாமலும், 8 நிமிடத்திற்கு அதிகமாகாமலும் இருத்தல் வேண்டும்.
*ஒவ்வொரு குழு நடனங்களிலும் குறைந்த பட்சம் 4 போட்டியாளர்களும், அதிக பட்சம் 8 போட்டியாளர்களும் பங்குபற்ற வேண்டும்.
*நிகழ்ச்சி நிரல் ஒழுங்கின்படி அடுத்தடுத்த போட்டியாளர்கள் மேடையருகில் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
*குறிப்பு: மாவீரர் துயிலும் இல்லப் பாடல், மற்றும் தமிழீழத் தேசியக்கொடிப் பாடல் இரண்டும் போட்டி நிகழ்வில் பயன்படுத்தக்கூடாது.
அனைத்துப் போட்டிகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டவை, நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறும் போட்டியாளர்கள் நடுவர்களால் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.
நடனப் பிரிவுகள் மற்றும் கட்டணம்:
*பதிவுக்கட்டணமாக, குழு நடனத்தில் பங்பெறும் ஒவ்வொருவரும் £10.00 பதிவுக் கட்டணமாகச் செலுத்துதல் வேண்டும்.
*தனி நடனப் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் £25.00 பதிவுக் கட்டணமாகச் செலுத்துதல் வேண்டும்.
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கிலக்கம்:
Revoult Bank
Name: EELATH THAARAGAI LTD
Sort Code: 23-01-63
Account No: 9008 1005
Ref: (Applicant Name)
சுட்டெண்:
*ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு வழங்கப்படும் சுட்டெண்ணை (Index Number) பார்வைக்கு தெரியும்படி போட்டியின் போது அணிந்திருத்தல் வேண்டும்.
*உங்கள் ஆசிரியர் பெயர்கள் எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது. தங்களுக்கு வழங்கப்பட்ட சுட்டெண்களை மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும்.
முதலாம் சுற்று: (தேர்வு)
செப்டெம்பர் மாதம் - 27.09.2026 அன்று HAYES இல்
காலை 10 முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.
தனி நடனம்: ஒவ்வொரு வயதுப் பிரிவில் இருந்தும் 8 போட்டியாளர்களும்,
குழு நடனம்: ஒவ்வொரு வயதுப் பிரிவில் இருந்தும் 8 குழு போட்டியாளர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
(இவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெறுவார்கள்.)
(தேர்வு நடைபெறும் முகவரி பின்னர் அறியத்தரப்படும்)
இரண்டாம் சுற்று: (தெரிவு)
ஒக்டோபர் மாதம் - 11.10.2026 அன்று HAYES இல்
காலை 10 முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.
தனி நடனம்: ஒவ்வொரு வயதுப் பிரிவில் இருந்தும் 4 போட்டியாளர்களும்,
குழு நடனம்: ஒவ்வொரு வயதுப் பிரிவில் இருந்தும் 4 குழு போட்டியாளர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
(இவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறுவார்கள்.)
(தெரிவு நடைபெறும் முகவரி பின்னர் அறியத்தரப்படும்)
இறுதிச்சுற்று:
ஒக்டோபர் மாதம் - 31.10.2026 அன்று NEW MALDEN இல்
காலை 10 மணிக்கு பிரமாண்டமாக ஆரம்பமாகும்.
தனிநபர் மற்றும் குழு நடனத்தில் முதலாம் இடத்தைப்பெறும் போட்டியாளர்கள் இவ்வாண்டிற்கான "ஈழத்தாரகை" எனும் அதியுயர் விருதைப் பெறுவார்கள்.
வெற்றிபெறும் போட்டியாளர் 2026 ம் ஆண்டிற்கான *ஈழத்தாரகை* பட்டத்தை தமதாக்கிக் கொள்வதோடு £1000 பெறுமதியான பரிசில்களையும் பெற்றுக்கொள்வார்.
இறுதிப்போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கி மதிப்பளிக்கப்படும்.
(இறுதிப் போட்டி நடைபெறும் முகவரி பின்னர் அறியத்தரப்படும்)
குறிப்பு: நடனப்போட்டியில் பங்குபற்றும் அனைத்துப் போட்டியாளர்களும் தங்களின் அடையாள அட்டையை முதல்சுற்றுப் போட்டியின் போது அவசியம் கொண்டுவர வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி/Application Deadline:
15/09/2026
மேலதிகத் தகவல்களுக்கு:
eelaththaaragai@gmail.com
0736 656 0598 | 0782 758 1499 | 0779 451 6514
நன்றி
தமிழர் கலைபண்பாட்டுப் பாசறை
பிரித்தானியா