• பாரதியார் விழா போட்டிகள்-2026

    (Primary 5 & 6)

  • போட்டி:

    புதிய ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்லுதல்

    தொடக்கநிலை ஐந்து, ஆறு ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

    தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் பாரதியார் விழா 2026 நிகழ்வுப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள புதிய ஆத்திசூடியின் முதல் 10 வரிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை உருவாக்க வேண்டும். பின்னர், தாங்கள் உருவாக்கிய கதையை உணர்வுடனும் தெளிவாகவும் சொல்ல வேண்டும்.

    போட்டிக்கான விதிமுறைகள்:

    1.      ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

    2.      போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கும் இறுதி நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    3.      போட்டிக்கான நேரம்: 3 முதல் 5 நிமிடங்கள்.

    4.      நீதிபதிகளின் முடிவே இறுதியானது.

    5.      இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் அல்லது பாரதியார் வேடத்தில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கலாம். பாரதியார் வேடத்திற்குத் தனியாக மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.

    6.      உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.

    7.      போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    8.      போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    9.      போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.


  • ASK our AI BOT for any clarifications- TLCS AI Chat


    போட்டிப் பதிவுக்கான இறுதி நாள்:   வெள்ளிக்கிழமை, 11  Sep 2026 அன்று இரவு 11.59 மணி
    போட்டி நடைபெறும் நாள்: ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2026, காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரைபோட்டி நடைபெறும்

    இடம் : உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்,Umar Pulavar Tamil Language Centre,2 Beatty Rd, Singapore 209943

    கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர்களான திரு ஜமால் ஷாஹுல் ஹமீது ஜமால் (Mr. Jamal Shahul Hameed Jamal) அவர்களை 85254982 என்ற எண்ணில் அல்லது, திரு மணிகண்டன் வைத்தியலிங்கம் (Mr. Manikandan Vaithilingam) அவர்களை 91839295 என்ற எண்ணில் அல்லது, bharathiyarvizha@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

  • Name of the Student may not be changed later! 

    "Certificates will be issued automatically using the name provided above and cannot be reissued or replaced."

  • Name of the School (MOE or Intl. Schools. If not available, select "My school Name Not listed" below add School name/Blk #Unit no/Post Code)*
  • Format: (65)-00000000.
  • Format: (65)-00000000.
  • Language spoken at home more frequently(Click Add option for other languages) *
  • Should be Empty: