போட்டி:
திடீர் தலைப்பில் பேசுதல்
உயர்நிலை மூன்று, நான்கு, ஐந்து ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
தலைப்புகள் போட்டி நடைபெறும் போது தரப்படும். வழங்கப்படும் தலைப்பில் மாணவர்கள் உடனடியாகப் பேச வேண்டும்.
பயிற்சிக்கான தலைப்பு வகைகள்:
1. எனக்குத் தன்னம்பிக்கை தரும் பாரதி
2. வாழ்வில் சவால்கள் வரும்போது துணையாக வரும் பாரதி
3. சிங்கப்பூரில் சிறந்து வாழ பாரதி கூறும் செய்திகள்
போட்டிக்கான விதிமுறைகள்:
1. ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
2. போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கும் இறுதி நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
3. போட்டிக்கான நேரம்: 2 முதல் 4 நிமிடங்கள்.
4. நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
5. இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
6. உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
7. போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
8. போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
9. போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.